/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 22 வாகனம் மறுஆய்வுக்கு உத்தரவு
/
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 22 வாகனம் மறுஆய்வுக்கு உத்தரவு
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 22 வாகனம் மறுஆய்வுக்கு உத்தரவு
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 22 வாகனம் மறுஆய்வுக்கு உத்தரவு
ADDED : மே 11, 2025 01:16 AM

திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில், 271 தனியார் பள்ளிகளில், 1,515 வாகனங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 56 பள்ளிகளில், 214 வாகனங்கள் நேற்று கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர் பிரதாப், எஸ்.பி., சீனிவாசபெருமாள், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். முதல் நாளான நேற்று, 108 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதன்பின், கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
பள்ளி பேருந்துகள் பாதுகாப்பாக இயக்க வேண்டும். மாணவர்கள் பயணிக்க கூடிய வாகனத்தை வேகமாக இயக்க கூடாது. ஓட்டுநர்கள் மாதந்தோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாகனங்களில் முகப்பு விளக்கு, பிரேக், படிக்கட்டு உள்ளிட்டவற்றை முறையாக ஆய்வு செய்வது அவசியம்.
தொடர்ந்து, செங்குன்றம், பூந்தமல்லி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் அவசர கதவுகள், வேக கட்டுப்பாட்டு கருவி, 'சிசிடிவி' கேமரா ஆகியவை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் கட்டமாக, நேற்று 108 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ததில், 86 வாகனங்கள் சரியாக உள்ளதாக அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 22 வாகனங்கள் பல்வேறு குறைபாடு இருந்ததால், அதை சரிசெய்த பின், மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, தீயணைப்பு துறை சார்பாக தீ விபத்து ஏற்பட்டால், அதை எப்படி அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வீரராகவர், மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.