sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளில்... சிக்கல்! சாலை உள்வாங்கியதால் குழாய் பதிப்பது நிறுத்தம்

/

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளில்... சிக்கல்! சாலை உள்வாங்கியதால் குழாய் பதிப்பது நிறுத்தம்

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளில்... சிக்கல்! சாலை உள்வாங்கியதால் குழாய் பதிப்பது நிறுத்தம்

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளில்... சிக்கல்! சாலை உள்வாங்கியதால் குழாய் பதிப்பது நிறுத்தம்


ADDED : டிச 05, 2024 11:34 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, டிச. 6- பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, ஆரணி ஆற்றின் குறுக்கே பூமிக்கடியில், 'ஹாரிசாண்டல் புல்லிங்' முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நேற்று முன்தினம், சாலையோர பகுதி திடீரென உள்வாங்கியதால், அங்கிருந்த மின்கம்பங்கள் விழும் நிலை ஏற்பட்டன. அதையடுத்து, குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், முதற்கட்டமாக, 62.82 கோடி ரூபாயில், நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதமுள்ள, 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'ஹாரிசாண்டல் புல்லிங்'


இதற்காக தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு, சிமென்ட் உருளைகள், 'மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றன.

வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு கீழ்நிலை தொட்டிகளும், கழிவுநீர் சேகரிப்பு நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

கழிவுநீர் சேகரிப்பு நிலையங்களில் இருந்து, நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாவணம் பகுதியில் அமைந்து வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்வதற்கான குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஆரணி ஆற்றைக் கடந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்க வேண்டும். இதற்காக நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக, 'ஹாரிசாண்டல் புல்லிங்' முறையில் ஆரணி ஆற்றில் பூமிக்கடியில், குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது.

திருவாயற்பாடி - சின்ன காவணம் இடையே ஆரணி ஆற்றில் பூமிக்கடியில், 'ஹாரிசாண்டல் புல்லிங்' முறையில் துளையிடும் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் சின்னகாவணம் பகுதியில் இருந்து, பிரத்யேக இயந்திரத்தின் உதவியுடன் பூமிக்கடியில், 250 மீ. நீளம், 12 மீ., ஆழத்தில் 'பைலட்' இரும்புக் குழாய் கொண்டு செல்லப்பட்டது.

இந்த, 'பைலட்' குழாய், கடந்த மாத இறுதியில் திருவாயற்பாடியை அடைந்தது. அதன் வழியாக, திருவாயற்பாடியில் தயார் நிலையில் உள்ள ராட்சத இரும்புக் குழாய்களை சின்னகாவணம் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

ராட்சத இரும்பு குழாய்களை நகர்த்துவதற்கு கிரேன் மற்றும் சிறு டிராலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

பரபரப்பு


அடுத்தகட்ட பணிகள் துவங்க இருந்த நிலையில், நேற்று முன்தினம், சின்னகாவணம் பகுதியில் 'ஹாரிசாண்டல் புல்லிங்' செய்யப்பட்ட இடங்களில், சாலையோர மண் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை உள்வாங்கிய இடங்களில் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்களும் சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. அதையடுத்து கிரேன் உதவியுடன், மின்கம்பம் விழாமல் இருக்க முட்டு கொடுக்கப்பட்டது.

மின்வாரியத்தினர் மின்கம்பத்தை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலை உள்வாங்கியதைத் தொடர்ந்து, 'ஹாரிசாண்டல் புல்லிங்' பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தொய்வு


பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில், தற்போது ஆற்றின் குறுக்கே குழாய் பதிப்பது சிக்கலாகி, அப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

'ஹாரிசாண்டல் புல்லிங்' முறையில், ஆறு அங்குல விட்டத்தில் துளையிடத் துவங்கி, 10, 18, 22, 40 அங்குலம் என படிப்படியாக விட்டத்தின் அளவு அதிகரிகப்பட்டு, அப்பணிகள் முடிந்து உள்ளன.

நடவடிக்கை


இறுதியாக, 44 அங்குலம் அளவு விட்டத்தில் துளையிடும் பணிகளை மேற்கொண்டபோது, சாலை உள்வாங்கியது. தொடர்மழையால் மண் பகுதிகளில் அதிக ஈரத்தன்மை இருக்கிறது. ஆற்றிலும், நீர்வரத்து அதிகமாகி உள்ளது. இதனால் பூமிக்கடியில் துளையிடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

உடனடியாக பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளோம். வரும் திங்கள்கிழமைக்குள் துளையிடும் பணிகள் முடிந்து, ராட்சத இரும்புக் குழாய்கள், திருவாய்பாடியில் இருந்து, சின்னகாவணம் பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us