/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.10.61 கோடி சொத்து வரி பாக்கி கீழ்ப்பாக்கம் ஹோட்டலுக்கு 'சீல்'
/
ரூ.10.61 கோடி சொத்து வரி பாக்கி கீழ்ப்பாக்கம் ஹோட்டலுக்கு 'சீல்'
ரூ.10.61 கோடி சொத்து வரி பாக்கி கீழ்ப்பாக்கம் ஹோட்டலுக்கு 'சீல்'
ரூ.10.61 கோடி சொத்து வரி பாக்கி கீழ்ப்பாக்கம் ஹோட்டலுக்கு 'சீல்'
ADDED : பிப் 22, 2024 11:11 PM

சென்னை, மாநகராட்சிக்கு 11 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு, அதிகாரிகள் நேற்று, 'சீல்' வைத்தனர்.
அண்ணா நகர் மண்டலத்தில், சொத்து வரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், 100வது வார்டு, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரைடு ஹோட்டல், 2012 ஆண்டு முதல், சொத்து வரி செலுத்தாதது தெரியவந்தது. விசாரணையில், 10.61 கோடி ரூபாய், பழைய சொத்து வரி பாக்கி இருந்ததும் தெரிந்தது.
இதுதொடர்பாக பலமுறை 'நோட்டீஸ்' வழங்கியும், ஹோட்டல் நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டினர். இதையடுத்து, மத்திய வட்டார உதவி வருவாய்த் துறை அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், ஹோட்டலுக்கு நேற்று சென்று, 'சீல்' வைத்தனர்.
வருவாய்த் துறை அதிகாரி ரவிச்சந்திரன் கூறியதாவது:
சொத்து வரியை ஆய்வு செய்ததில், ஹோட்டல் நிர்வாகம், தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் நிலுவைத் தொகை செலுத்தாதது தெரிந்தது. அரசின் கூடுதல் செயலர் உட்பட பலர் நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் அலட்சியம் காட்டினர். அதேபோல், முறையான உரிமம் பெறாமலும், ஹோட்டல் செயல்பட்டது தெரியவந்தது.
முதற்கட்ட நடவடிக்கையாக ஹோட்டலுக்கு 'சீல்' வைத்துள்ளோம். பாக்கி தொகை செலுத்துவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.