/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளின் காதலனின் சகோதரரை தாக்கிய தந்தைக்கு காப்பு
/
மகளின் காதலனின் சகோதரரை தாக்கிய தந்தைக்கு காப்பு
ADDED : டிச 05, 2024 11:29 PM
ஆர்.கே.பேட்டை,ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகள் மதுமிதா, 19; இவர், கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மதுமிதாவும், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த மோகன், 22, என்பவரும் நட்பாக பழகி வருகின்றனர். இது குறித்து அறிந்த விஜயகுமார், மோகன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது விஜயகுமார், மோகனின் சகோதரர் கஜேந்திரனை பிளேடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த கஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின், மேல்சிகிச்சைக்காக, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்.கே.பேட்டை போலீசார், விஜயகுமாரை நேற்று கைது செய்தனர்.