/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காதலிக்கு கத்திக்குத்து காதலனுக்கு 'காப்பு'
/
காதலிக்கு கத்திக்குத்து காதலனுக்கு 'காப்பு'
ADDED : அக் 26, 2024 07:52 PM
திருவள்ளூர்:காதலியை கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகள் விஜயராணி, 24. இவர்,
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த பண்ணுார் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் பணிபுரியும் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துபெருமாள், 24 என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கருத்து வேறுபாடு பிரிந்தனர். இந்நிலையில் கடந்த, 24ம் தேதி, முத்துபெருமாள், விஜயராணியின் சகோதரி சினேகா என்பவருக்கு போன் செய்து, 'உன் அக்காவை கொல்லாமல் விடமாட்டேன்' என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, முத்துபெருமாள், பண்ணுாரில் உள்ள விஜயராணியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, கத்தியால் அவரின் கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
அருகில் இருந்தோர் விஜயராணியை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, முத்துபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.