/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
/
மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
ADDED : செப் 27, 2024 01:17 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த குண்ணம்மஞ்சேரி, கமலா நகரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்தாண்டு, இங்கு தனியார் மொபைல்போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது.
பணிகள் துவங்கியபோது, குடியிருப்பு நடுவே டவர் அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திலும், குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 30ம் தேதி டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் குடியிருப்புவாசிகள், பொன்னேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
காவல் நிலைய அதிகாரிகள், குடியிருப்புவாசிகளை 'டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறி அனுப்பினர்.
இதுதொடர்பாக குடியிருப்புவாசிகள், பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்த நிலையில், நேற்று டவர் அமைப்பதற்கான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன.
உடனடியாக, டவர் அமைக்கும் இடத்தில் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். பாதுகாப்பிற்காக வந்த காவல் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், வரும் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களையும் காண்பித்தனர். இதை தொடர்ந்து, பணிகள் நிறுத்தப்பட்டன.
இதுதொடர்பாக குடியிருப்புவாசிகள் தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர், ஆவடி கமிஷனர், பொன்னேரி சப் - கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.