ADDED : நவ 20, 2025 03:52 AM

திருத்தணி: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்தணி தாலுகாவில் உள்ள தாழவேடு, கோரமங்கலம், வி.கே.ஆர்.புரம், வீரகநல்லுார், அருங்குளம் ஊராட்சிகளில் வசிக்கும், 60க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வீட்டுமனை பட்டா விரைந்து வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பீரகுப்பம் அருந்ததி காலனி, கே.ஜி.கண்டிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து, கணினி பட்டா வழங்க வேண்டும்.
பீரகுப்பம், பெரியகடம்பூர், கொத்துார், ஆர்.டி.ஓ., சத்யா நகர் ஆகிய பகுதிகளில் சுடுகாடு வசதி அமைத்துதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

