/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரண்வாயல்குப்பத்தில் சுடுகாடு கேட்டு மறியல்
/
அரண்வாயல்குப்பத்தில் சுடுகாடு கேட்டு மறியல்
ADDED : ஜன 24, 2025 01:35 AM

அரண்வாயல்குப்பம்:திருவள்ளூர் ஒன்றியத்துக்குட்பட்டது அரண்வாயல்குப்பம் ஊராட்சி. இங்கு இறந்தவர்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு கூவம் ஆற்றுப்பகுதியை கரையோரம் உள்ள பகுதிகளை பயன்படுத்தி வந்தனர்.
கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தகனம், மற்றும் அடக்கம் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, மரணமடைந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த அன்னம்மாள், 80, அடக்கம் செய்வதற்காக இப்பகுதியில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த சுடுகாடு பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து, அந்த சமூகத்தினர் இதையே வழக்கமாக கொண்டால் எங்களுக்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இறந்த பாட்டியின் உறவினர்கள் நேற்று, மாலை 5:30 மணியளவில் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சுடுகாடு கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவறிந்த திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த், பூந்தமல்லி உதவி கமிஷனர் ரவிக்குமார், வெள்ளவேடு மற்றும் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், ஜெயகிருஷ்ணன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார் சமாதான பேச்சு நடத்தினர்.
பின், தாசில்தார் ரஜினிகாந்த் சுடுகாடு மாற்று இடம் குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

