/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இலவச வீட்டுமனைகள் அளவீடு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
/
இலவச வீட்டுமனைகள் அளவீடு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 28, 2024 12:36 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், ஆர்.வி.என்.கண்டிகை பகுதியில் வீடுகள் இல்லாததவர்களுக்கு கடந்த, 1999ம் ஆண்டு மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் சார்பில், 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் வீட்டுமனைகளை இதுவரை அளந்து கொடுக்காமல் திருத்தணி வருவாய் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். பயனாளிகள் பலமுறை நிலத்தை அளவீடு செய்யுமாறு தாசில்தார், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் நேற்று காலை திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன், இலவச வீட்டுமனைகளை அளந்து கொடுக்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தினர்.
பின் பயனாளிகள் தாசில்தார் மலர்வழியிடம், அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகள் அளந்து கொடுத்தால், இ-பட்டா பெற முடியும், கலைஞரின் கனவு இல்லம், பிரதமரின் வீடு வழங்கும் ஆகிய திட்டங்கள் மூலம் சொந்தமாக வீடுகள் கட்டிக் கொள்ள முடியும் என தெரிவித்தும், மனுவாகவும் கொடுத்தனர். மனுவை பெற்ற தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.