/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்முடியை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
/
பொன்முடியை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 28, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது கண்டித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் திருத்தணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருத்தணி நகர அ.தி.மு.க., செயலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் பி.வி.ரமணா, கழக அமைப்பு செயர் திருத்தணி கோ. அரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்களை இழிவுப்படுத்தி பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.