/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை வசதி கேட்டு அருமந்தையில் போராட்டம்
/
சாலை வசதி கேட்டு அருமந்தையில் போராட்டம்
ADDED : ஜன 24, 2024 12:54 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த அருமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாக்கம் காலனி பகுதிக்கு செல்லும் சாலை, சரளைக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி நேற்று, கிராமவாசிகள் அருமந்தை - ஞாயிறு நெடுஞ்சாலையில், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மாநகர பேருந்து தடம் எண். 57 சி- யை சிறை பிடித்தனர்.
கிராமவாசிகள் தெரிவித்ததாவது:
சரளைக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியதாக உள்ளது. வாகனங்கள் செல்பவர்கள் கற்களில் சிக்கி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர்.
பள்ளி கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், கர்ப்பிணியர் என அனைத்து தரப்பினரும் மோசமான இந்த சாலையால் தினமும் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஊராட்சி நிர்வாகத்தினரும், சாலைப்பணிகளை உடனடியாக துவங்குவதாக உறுதி அளித்தனர்.
அதையடுத்து கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.

