/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல் குவாரியால் சீரழியும் பாதை பள்ளிப்பட்டில் ஆர்ப்பாட்டம்
/
கல் குவாரியால் சீரழியும் பாதை பள்ளிப்பட்டில் ஆர்ப்பாட்டம்
கல் குவாரியால் சீரழியும் பாதை பள்ளிப்பட்டில் ஆர்ப்பாட்டம்
கல் குவாரியால் சீரழியும் பாதை பள்ளிப்பட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 05, 2025 09:25 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த கொளத்துார் கிராமத்தின் வடக்கில் உள்ள மலைப்பகுதியில், கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு, தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வந்து செல்கின்றன. இதனால், கொளத்துார் கிராம பொது சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை கல் குவாரிக்கு செல்லும் பாதையை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், குவாரிக்கு வந்த லாரிகள், நகரி சாலையில் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். போலீசாரின் சமரசத்தை ஏற்று, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கடந்த வாரம், கொளத்துார் அடுத்த நெடியம் பகுதியில், கல் குவாரிக்கு வந்து செல்லும் லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறுவதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.