/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் காலி பணியிடம் நிரப்ப ஆர்ப்பாட்டம்
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் காலி பணியிடம் நிரப்ப ஆர்ப்பாட்டம்
திருத்தணி சர்க்கரை ஆலையில் காலி பணியிடம் நிரப்ப ஆர்ப்பாட்டம்
திருத்தணி சர்க்கரை ஆலையில் காலி பணியிடம் நிரப்ப ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 02:08 AM

திருத்தணி:திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், கரும்பை அரவைக்காக அனுப்பி வைக்கின்றனர். நேற்று, திருத்தணி கமலா தியேட்டர் அருகே, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.
இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, ஒரு டன் கரும்புக்கு 5,500 ரூபாய் வழங்க வேண்டும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து, எத்தனால் மற்றும் இணைமின் உற்பத்தி ஆலையாக தரம் உயர்த்த வேண்டும்.
வருவாய் பங்கீட்டு சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய எஸ்.ஏ.பி., முறையை அமல்படுத்த வேண்டும். வெட்டு கூலி பிரச்னையை முத்தரப்பு கூட்டம் நடத்தி முறைப்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கரும்பு நடவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். கரும்புகளை தனியார் ஆலைகள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.