/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
/
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
ADDED : மே 20, 2025 12:13 AM
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது, குன்னவலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புருஷோத்தமன் சக்கர நாற்காலி வேண்டி நேற்று மனு அளித்தார்.
மனுவை பெற்ற கலெக்டர், உடனடியாக 15,750 ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலியை வழங்கினார். தொடர்ந்து, திருவூர் பகுதியைச் சேர்ந்த பிரனேஷ், 2021 ஆக., 29ம் தேதி கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது தாய் லதாவிடம், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார்.