/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதுமக்களுக்கு குறள் ஒப்புவித்தல் போட்டி
/
பொதுமக்களுக்கு குறள் ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜன 28, 2026 07:33 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஆண்டும் குறள்வாரமாக கொண்டாடப்படும் என, முதல்வர் அறிவித்தார். அதன்படி, குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக, பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், குறள் ஒப்புவித்தல் போட்டி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பிப்., 3ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது.
போட்டியில், முதல் மூன்று இடம் பெறுவோருக்கு, முறையே 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 97901 72986, 80560 10146 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

