/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் தொடர்பு முகாம் 29ம் தேதி ஒத்தி வைப்பு
/
மக்கள் தொடர்பு முகாம் 29ம் தேதி ஒத்தி வைப்பு
ADDED : ஜன 07, 2025 08:46 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் கிராமத்தில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால், இம்மாதம் 29ம் தேதி நடைபெறும் என, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.
பெத்திக்குப்பம் ஊராட்சியை கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதை எதிர்க்கும் விதமாக, கலெக்டர் தலைமையில் பெத்திக்குப்பம் கிராமத்தில் நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமை, மகளிர் சுயஉதவி குழு பெண்களும், நுாறு நாள் வேலை பணியாளர்களும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.