/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் ரவுடி கழுத்து அறுத்து கொலை
/
ஆவடியில் ரவுடி கழுத்து அறுத்து கொலை
ADDED : ஜன 06, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த வீராபுரம், புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜொள்ளு தினேஷ், 20; பழைய குற்றவாளி. இவர் மீது 16 வழக்குகள் உள்ளன.
இவர், நேற்று இரவு புதிய கன்னியம்மன் நகரில் உள்ள மசூதியின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில், மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக மர்ம நபர்களால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

