/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு புதுகும்மிடி கிராம மக்கள் முற்றுகை
/
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு புதுகும்மிடி கிராம மக்கள் முற்றுகை
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு புதுகும்மிடி கிராம மக்கள் முற்றுகை
பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு புதுகும்மிடி கிராம மக்கள் முற்றுகை
ADDED : டிச 31, 2024 01:10 AM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கான சாத்திய கூறுகளை கண்டறிய, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சார்பில், மூன்று மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளும், அதன் ஆண்டு வருவாய் மற்றும் மக்கள் தொகை குறித்த விபரம் கேட்கப்பட்டிருந்தது.
அதன்படி, புதுகும்மிடிப்பூண்டி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சிகளை தேர்வு செய்து அதன் விபரத்தை பேரூராட்சி நிர்வாகம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் அஸ்வினி தலைமையில், 200 பேர், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின், ஊராட்சி பி.டி.ஓ., அமிழ்தமன்னனிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
மனு விபரம்:
ஊராட்சிக்கு உட்பட்ட மக்களில், பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். ஊராட்சியில், 1,985 பேர், நுாறு நாள் வேலை பார்த்து பயனடைந்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டால், ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன், ஊராட்சிகளுக்கு உண்டான சலுகைகளும், திட்டங்களும் பறிபோகும்.
அதனால், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியினை பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவினை கைவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர்.