/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் காயம்
/
மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் காயம்
ADDED : ஆக 25, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 48. இவர், இதே ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை தரணிவராகபுரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது காரணமாக, குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியவில்லை.
இதையடுத்து, விஜயகுமார் மின்மாற்றியில் ஏறி பழுது பார்க்கும் போது, திடீரென மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் விஜயகுமாரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.