sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பஞ்சரான ஊத்துக்கோட்டை சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

/

 பஞ்சரான ஊத்துக்கோட்டை சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

 பஞ்சரான ஊத்துக்கோட்டை சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

 பஞ்சரான ஊத்துக்கோட்டை சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்


ADDED : மார் 10, 2026 06:03 AM

Google News

ADDED : மார் 10, 2026 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருமழிசை பகுதியில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழியாக மாறிய நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

பூந்தமல்லி அருகே திருழிசை அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும் 50,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் உள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள நெடுஞ்சாலை சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us