/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு பகுதிவாசிகளுக்கு கை கொடுக்கும் புண்ணியம் பாலம்
/
பள்ளிப்பட்டு பகுதிவாசிகளுக்கு கை கொடுக்கும் புண்ணியம் பாலம்
பள்ளிப்பட்டு பகுதிவாசிகளுக்கு கை கொடுக்கும் புண்ணியம் பாலம்
பள்ளிப்பட்டு பகுதிவாசிகளுக்கு கை கொடுக்கும் புண்ணியம் பாலம்
ADDED : ஜன 01, 2025 12:23 AM

பள்ளிப்பட்டு,
பள்ளிப்பட்டு அருகே, உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.
இதில், பள்ளிப்பட்டு மற்றும் புண்ணியம் இடையே மேம்பாலங்களும், நெடியம், சாமந்தவாடா இடையே தரைப்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
நெடியம் மற்றும் சாமந்தவாடா தரைப்பாலங்கள் அடிக்கடி சேதம் அடைந்துவரும் நிலையில், புண்ணியம் மற்றும் பள்ளிப்பட்டு தரைப்பாலங்கள் வழியாக மட்டும் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதில், புண்ணியம் தரைப்பாலத்தின் வழியாக, பள்ளிப்பட்டு ஒன்றியத்தின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநிலம், நகரி, புத்துார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு புண்ணியம் மேம்பாலம் வழியாக பயணித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு மேம்பாலம் வழியாக ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயணிக்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் சமீபத்திய மழையில் பலத்த சேதம் அடைந்துள்ள நிலையில், புண்ணியம் மேம்பாலம் பகுதிவாசிகளின் போக்குவரத்துக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது.

