/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலநிலை மாற்றம் குறித்து பொம்மலாட்ட விழிப்புணர்வு
/
காலநிலை மாற்றம் குறித்து பொம்மலாட்ட விழிப்புணர்வு
ADDED : ஜூலை 28, 2025 11:27 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம், அதன் விளைவுகள், அதற்கான தீர்வுகள் குறித்து, கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.
சி.ஏ.ஜி., என்ற தனியார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொம்மலாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, மரம் வளர்ப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது, குப்பை கழிவுகளை தரம்பிரித்து அகற்றுவது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏராளமான கிராம மக்கள் பொம்மலாட்ட நிகழ்வை காண குவிந்தனர்.

