UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: ‘ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவில் குறைபாடுகள் இருந்தால், மக்கள் புகார் அளிக்கலாம்’ என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், ரசீதுகளில் குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
வழங்கப்படும் பொருட்களின் அளவுகளில் வேறுபாடு இருந்தால், பொதுமக்கள் 1800 – 425 5901 மற்றும் 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
