தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


ADDED : ஜன 03, 2025 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்கியது.

துவக்க நிகழ்ச்சி, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் இணைந்து பட்டரைபெரும்புதுாரில் நேற்று நடந்தது.

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி துவக்கி வைத்தார். உதவி இயக்குநர்கள் சுபஸ்ரீ, தாமோதரன், உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 550க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 'ஆவின்' நிறுவனத்தின் சார்பாக எருமை கன்று வளர்க்கும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எருமை கிடரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து, தாது உப்பு கலவை மற்றும் தீவன பயிர்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us