/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காட்டில் ரேக்ளா குதிரை பந்தயம்
/
திருவாலங்காட்டில் ரேக்ளா குதிரை பந்தயம்
ADDED : ஜன 15, 2025 11:45 PM

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றிய தி.மு.க., சார்பில், பொங்கல் பண்டிகையையொட்டி, 'ரேக்ளா' குதிரை பந்தயப் போட்டிகள் நேற்று நடந்தன.
ஒன்றிய செயலர் மகாலிங்கம் ஏற்பாட்டில் நடந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து 35 ரேக்ளா குதிரைகள் பங்கேற்றன.
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு நான்குமுனை சந்திப்பில் இருந்து அத்திப்பட்டு வரை மூன்று பிரிவாக நடைபெற்ற போட்டிகளில் பெரிய குதிரைகள் 16 கி.மீ, துாரமும், சிறிய குதிரைகள் 14 கி.மீ. புதிய குதிரைகள் 12 கி. மீ, துாரத்திற்கும் பந்தயப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், திருத்தணி எம்.எல்.ஏ.,வுமான எஸ் சந்திரன், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு கோப்பை, பரிசு தொகைகள் வழங்கப்பட்டன.

