தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தண்டவாள பராமரிப்பு பணி ரயில்வே கேட் 3 நாட்கள் மூடல்

தண்டவாள பராமரிப்பு பணி ரயில்வே கேட் 3 நாட்கள் மூடல்

தண்டவாள பராமரிப்பு பணி ரயில்வே கேட் 3 நாட்கள் மூடல்


UPDATED : நவ 23, 2026 08:48 PM

ADDED : நவ 23, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:48 PM ADDED : நவ 23, 2026 08:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: திருவாலங்காடில், தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, மூன்று நாட்கள் ரயில்வே கேட் மூடப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை –- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம்.

இங்கு, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே, கனகம்மாசத்திரம் –-- தக்கோலம் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு ரயில்வே கேட் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில்வே கேட்டை, சின்னம்மாபேட்டை, களக்காட்டூர் உட்பட, 20 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு பணிக்காக, பகுதி நேரமாக நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரையும், இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரையும் என, மூன்று நாட்கள் மூடப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us