ADDED : மே 08, 2026 09:53 PM

அ நிறம் | அளவு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 64.10 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் இரண்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள செவ்வாப்பேட்டையில் 8.10 கோடி ரூபாய் மற்றும் வேப்பம்பட்டில் 56 கோடி ரூபாய் என, மொத்தம் 64.10 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.
இந்த இரண்டு ரயில்வே மேம்பால பணிகளை, கலெக்டர் பிரதாப், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் தேசிகன், கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதன்பின், இரண்டு ரயில்வே மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டார்.
