/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு பணி மேற்கொள்ள ரயில்வே சுரங்கப்பாதை மூடல்
/
பராமரிப்பு பணி மேற்கொள்ள ரயில்வே சுரங்கப்பாதை மூடல்
பராமரிப்பு பணி மேற்கொள்ள ரயில்வே சுரங்கப்பாதை மூடல்
பராமரிப்பு பணி மேற்கொள்ள ரயில்வே சுரங்கப்பாதை மூடல்
ADDED : நவ 11, 2025 10:24 PM

கும்மிடிப்பூண்டி: தண்ணீர் கசிவால் பலவீனமான கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை, பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நகர் பகுதியையும், சிப்காட் வளாகத்தையும் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சென்று வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் அடிப்பகுதி வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு, எப்போதும் தண்ணீர் தேங்கி இருக்கும்.
தண்ணீர் தேங்குவதால், சுரங்கப்பாதை சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. பலவீனமாக உள்ள சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ரயில்வே சுரங்கப்பாதையின் இரு நுழைவாயில் இரும்பு கதவுகளிலும் அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறிவிப்பில், 'பராமரிப்பு பணிகளுக்காக, டிசம்பர் 9ம் தேதி வரை சுரங்கப்பாதை மூடப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுரங்கப்பாதை வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் அனைவரும், கன்னியம்மன் கோவில் ரயில் மேம்பாலம் வழியாக, 4 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து கசிவுகளையும் அடைப்பது, சாலையை புதுப்பிப்பது, மழைநீர் உடனுக்குடன் வடிந்து செல்ல வடிகால் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாக அலுவலர் கூறுகையில், 'பராமரிப்பு பணிகளுக்காக, ஒரு மாதம் அவகாசம் அறிவித்த போதிலும், இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகள் முடிக்கப்படும்' என, தெரிவித்தார்.

