/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்க பாதை மூடல் சிப்காட் தொழிலாளர்கள் சிரமம்
/
ரயில்வே சுரங்க பாதை மூடல் சிப்காட் தொழிலாளர்கள் சிரமம்
ரயில்வே சுரங்க பாதை மூடல் சிப்காட் தொழிலாளர்கள் சிரமம்
ரயில்வே சுரங்க பாதை மூடல் சிப்காட் தொழிலாளர்கள் சிரமம்
ADDED : டிச 02, 2024 02:56 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகர் பகுதிக்கும் சிப்காட் பகுதிக்கும் இடையே ரயில் பாதை செல்கிறது. அதனால், ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்க பாதை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கம்.
கும்மிடிப்பூண்டி நேற்று முன்தினம் அதி கனமழை பெய்ததால், மேற்கண்ட சுரங்கபாதையில் குளம் போல், ஐந்து அடி உயரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்தை தடை செய்யும் விதமாக சுரங்க பாதையின் இரு முனையிலும் உள்ள இரும்பு கதவு மூடப்பட்டது.
இதனால், சிப்காட் தொழிலாளர்கள் அனைவரும் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக கடந்து செல்லும் பாதசாரிகள் ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலம் வழியாக சென்று வருகின்றனர். ரயில்வே நிர்வாகம், உடனடியாக சுரங்க பாதையில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.