/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழையால் அரிக்கப்பட்ட நெடுஞ்சாலை தடுப்புச்சுவரின்றி விபத்து அபாயம்
/
மழையால் அரிக்கப்பட்ட நெடுஞ்சாலை தடுப்புச்சுவரின்றி விபத்து அபாயம்
மழையால் அரிக்கப்பட்ட நெடுஞ்சாலை தடுப்புச்சுவரின்றி விபத்து அபாயம்
மழையால் அரிக்கப்பட்ட நெடுஞ்சாலை தடுப்புச்சுவரின்றி விபத்து அபாயம்
ADDED : ஜன 17, 2024 08:26 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தத்தமஞ்சி கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு பயணிக்கிறது. ஆரணி ஆற்றை ஒட்டி மீஞ்சூர் - திருப்பாலைவனம் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
கடந்த மாதம், 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள இச்சாலையில், மழைநீர் 2 அடி உயரத்திற்கு ஆர்ப்பரித்து சென்றது.இதனால், நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, 100 மீ., நீளத்திற்கு ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டன. சாலையோரங்களில் மரங்களும் வேருடன் சாய்ந்தன.பழவேற்காடு பகுதியில் இருந்து, மீஞ்சூர் வழியாக சென்னை சென்று வருபவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
புயல் முடிந்து, ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், அங்கு சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இந்த பகுதியில் நெடுஞ்சாலை அரித்து செல்லப்படுவது தொடர் கதையாக உள்ளது.
இப்பகுதியில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, சாலை அரித்து செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.