நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் நேற்று பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மணவூர், தொழுதாவூர், சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம், பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.