நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,:திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரை பலத்த மழை பெய்தது.
மேலும் தொடர்ந்து துாறல் மழை பெய்துக் கொண்டிருந்தது. பலத்த மழையால் நகராட்சியில் பெரும்பாலான சாலை மற்றும் தெருக்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சென்றதால், மக்கள் நடமாட முடியாமல் தவித்தனர்.

