/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி ஆரணி ஆற்றில் மழைநீர் தேக்கம்
/
பொன்னேரி ஆரணி ஆற்றில் மழைநீர் தேக்கம்
ADDED : ஜன 12, 2024 09:57 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே, நான்கு ஷட்டர்களுடன் கூடிய, 136 மீ. நீளம் கொண்ட தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது.
மழைக்காலங்களில் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும், மழைநீர் கரையோர கிராமங்களின் நிலத்தடி நீரை பாதுகாத்து வருகிறது.
விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் இருப்பதுடன், உவர்ப்பு தன்மை ஏற்படுவதை தடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மழையில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தடுப்பணை நிரம்பியது. தடுப்பணையில் இருந்து, மூன்று கி.மீ., தொலைவிற்கு லட்சுமிபுரம் அணைக்கட்டு பகுதிவரை ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த ஆண்டும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆற்றின் கரையோரங்களில் உள்ள செங்கல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குளிக்க, துணி துவைக்க ஆற்றுநீரை பயன்படுத்துகின்றனர்.
உள்ளூர் மீனவர்கள், தினமும் ஆற்றில் வலைவீசி, மீன், இறால்களை பிடித்து அன்றாடம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆரணி ஆற்றில் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகள் அமைத்து, கடலுக்கு சென்று வீணாகும் மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.