/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர்
/
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர்
ADDED : டிச 03, 2024 06:13 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் பகுதியில் தொடர் மழையால் குளமாக தேங்கிய தண்ணீரால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் அடுத்த, சிறுவானுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.கார்டன் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம், போதுமான மழைநீர் கால்வாய் வசதியினை ஏற்படுத்தி தரவில்லை. இதனால், மூன்ற நாட்களாக பெய்த மழையால், சாலைகள் மற்றும் வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
இதன் காரணமாக, குடியிருப்புவாசிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தபடி சென்று வருகின்றனர். பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பெண்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் துார்ந்து விட்டதால், சமீபத்தில் பெய்த மழைநீர் சாலையில் குளமாக தேங்கி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தண்ணீரில் தத்தளித்தபடி பயணிக்க வேண்டி சூழல் உருவாகி உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.