/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் பூங்காவில் தேங்கியுள்ள மழைநீர்
/
திருவள்ளூர் பூங்காவில் தேங்கியுள்ள மழைநீர்
ADDED : டிச 04, 2024 11:24 PM

திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., காலனியில் உள்ள பூங்காவில், ராஜாஜிபுரம், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், தினமும் காலை, மாலை நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சிறுவர்கள் இங்கு விளையாடி வருகின்றனர்.
ஒவ்வொரு மழை காலத்திலும் பெய்யும் மழைநீர், சிறுவர் விளையாடும் பகுதியில் தேங்கி விடுவது வழக்கம். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழைநீர், பூங்கா முழுதும் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. சிறுவர் விளையாடும் பகுதி உள்ளிட்ட, நடைபயிற்சி பாதை மற்றும் பூங்காவின் உட்புறம் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால், மூன்று நாட்களாக நடைபயிற்சியாளர்கள் இங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர் தேங்கியதை நகராட்சி நிர்வாகம் அகற்றாத நிலையில், மூன்று நாட்களாக பூங்கா மூடப்பட்டுள்ளதாக, பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், பூங்காவில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.