/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தேங்கிய மழைநீர் மாணவர்கள் திண்டாட்டம்
/
சாலையில் தேங்கிய மழைநீர் மாணவர்கள் திண்டாட்டம்
ADDED : அக் 29, 2025 02:08 AM

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையில், இரண்டு ஆண்டுகளாக அரசு பாலிடெக்னிக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரிக்கு செல்ல முறையாக சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
நெடுஞ்சாலையில் இருந்து கல்லுாரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால், இச்சாலையில் தண்ணீர் தேங்கி குளமாக மாறியுள்ளது.
இக்கல்லுாரியில் பயிலும் மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாலிடெக்னிக் கல்லுாரிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

