/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடுகள், சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் பரிதவிப்பு
/
வீடுகள், சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் பரிதவிப்பு
வீடுகள், சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் பரிதவிப்பு
வீடுகள், சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் பரிதவிப்பு
ADDED : அக் 21, 2025 11:19 PM

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், குடியிருப்புகள், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால், பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமம் வடக்கு தெருவில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் சாலையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இரு நாட்களாக பெய்து வரும் மழையால், தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளையும், அங்குள்ள விநாயகர் கோவிலையும் சூழ்ந்துள்ளது.
வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர்.
சோழவரம் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த அத்திப்பேடு, தேவனேரி, எஸ்.பி.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில், 2 - 3 அடி உயரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
அதிகப்படியான தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில், வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. வழக்கமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதை அறிந்து, மாற்று வழித்தடங்களில் செல்கின்றனர்.
புதிதாக இச்சாலைகளில் பயணிப்போர், தண்ணீரில் சிக்கி தவிக்கின்றனர். மழைநீர் தேங்கியிருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில், அப்பகுதிகளில் எவ்வித எச்சரிக்கையும் இல்லை. இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், அசம்பா விதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடம்பத்துார் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை, பல்வேறு இடங்களில் சேதமடைந்து பல்லாங்குழிகளாக மாறியுள்ளதால், வாகன ஒட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தற்போது சேதடைந்த சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில், நாகலாபுரம், சத்தியவேடு, திருவள்ளூர் ஆகிய சாலைகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்காக, சாலையின் இருபுறமும் கால்வாய்கள் உள்ளன.
வியாபாரிகள் சிலர் கால்வாயை அடைத்து, மணல் மற்றும் கான்கிரீட் போட்டு பாதை அமைத்துள்ளனர்.
இத னால், மழைநீர் செல்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சாலையோரம் உள்ள கால்வாய் அடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -: