தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்மாற்றியை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைப்பு

 மின்மாற்றியை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைப்பு

 மின்மாற்றியை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைப்பு


ADDED : பிப் 21, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்தை: உளுந்தையில், நெடுஞ்சாலையோரம் மின்மாற்றியை அகற்றாமலேயே மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை, 2013ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது, இச்சாலை ஆறு வழிச்சாலையாக சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், சில இடங்களில் சாலையோரம் உள்ள மின்மாற்றி மற்றும் கம்பங்களை இடமாற்றாமலேயே மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us