ADDED : மார் 17, 2026 05:42 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஐ.சி.எம்.ஆர்., சிறுவானுார்கண்டிகை, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஏற்கனவே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளது.
திருப்பாச்சூர், சிறுவானுார் ஊராட்சிகள் வழியாக, சாலையோரம் அமைந்துள்ள ஜெ.ஜெ.அவென்யூ, சிறுவானுார்கண்டிகை, புல்லரம்பாக்கம் வழியாக சாலையை கடந்து, மறுபகுதியில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் செல்கிறது. தற்போது, ஏற்கனவே இருந்த கால்வாய்களை அகலப்படுத்தாமல், அவற்றை மண் கொண்டு நிரப்பினர்.
இதனால், மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து விடும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சிறுவானுார்கண்டிகை அருகில், நெடுஞ்சாலை துறையினர், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

