/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 14, 2025 08:25 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின் தரம் குறித்து சோதனை மூலம் கண்டறியும் முறையை கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார்.
மேலும், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பின், கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் துார்வாரி ஆழப்படுத்துவது, குளம், குட்டை மற்றும் வரத்து கால்வாய்கள் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் புதுப்பிக்கப்பட உள்ளன. குடிநீர் பரிசோதனை கருவிகள் ஆய்வகத்தில் உள்ளது. மழைக்கு முன், தண்ணீரின் மாசு கண்டறிய, தண்ணீரில் ராசாயனம் அளவு குறித்து ஆய்வு செய்து கண்காணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.