/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி மீஞ்சூர் பூங்கா குளம்போல தேங்கியுள்ள மழைநீர்
/
பராமரிப்பின்றி மீஞ்சூர் பூங்கா குளம்போல தேங்கியுள்ள மழைநீர்
பராமரிப்பின்றி மீஞ்சூர் பூங்கா குளம்போல தேங்கியுள்ள மழைநீர்
பராமரிப்பின்றி மீஞ்சூர் பூங்கா குளம்போல தேங்கியுள்ள மழைநீர்
ADDED : ஜன 25, 2025 01:18 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி.எல். பிரபு நகரில், 2010ல், சி.பி.சில்.எல்., நிறுவனத்தின், சமூக பங்களிப்பு திட்டத்தில் பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர், கான்கிரீட் இருக்கைகள், நடைபயிற்சி மேற்கொள்வதான பாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பு இல்லாததால், பூங்கா பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
பூங்கா முழுதும் மழைநீர் குளம்போல் தேங்கி இருக்கிறது. இருக்கைகள் சேதம் அடைந்து உள்ளன. மின்விளக்கு வசதிகளும் இல்லை.
இப்பகுதியில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ள நிலையில், சிறுவர்கள் விளையாடுவதற்கும், முதியவர்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வதற்கும் வாய்ப்பில்லாத நிலை உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம், பூங்காவை சீரமைக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.