/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
/
திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
திருத்தணி அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
ADDED : ஜூலை 19, 2025 12:40 AM

திருத்தணி:திருத்தணியில் பெய்த மழை காரணமாக, அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 1,350க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் தாழ்வான பகுதி என்பதால், பலத்த மழை பெய்யும் போது, வகுப்பறைக்கு செல்லும் பாதை மற்றும் விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக மழை பெய்யும் போது, விளையாட்டு மைதானத்தில், 3.5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கிவிடும். அப்போது, மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்படும். இதனால், மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில் பெய்த பலத்த மழையால், விளையாட்டு மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், மாணவியருக்கு காலையில் இறைவணக்கம் நிகழ்ச்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்படவில்லை.
எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், தாழ்வான பகுதிகளை உயரமாக உயர்த்த வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.