/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவமனை வாயிலில் கழிவுநீர் கலந்த மழைநீர்
/
மருத்துவமனை வாயிலில் கழிவுநீர் கலந்த மழைநீர்
ADDED : டிச 03, 2024 06:24 AM

திருமழிசை : திருமழிசை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை. இந்த மருத்துவமனையை 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயில் அருகே பயணியர் மற்றும் பகுதிவாசிகள் பயன்படுத்தும் கட்டண கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறை போதிய பராமரிப்பில்லாததால் கழிவுநீர் பேருந்து நிலைய வளாகத்தில் வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சில தினங்களாக கனமழையில் மழைநீரும் பேருந்து நிலைய வளாகத்தில் கழிவுநீருடன் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு வருவோர், அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்டண கழிப்பறையை சீரமைக்கவும், தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள், பயணியர் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.