ADDED : மார் 10, 2024 01:38 AM

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ராஜாநகரம் ஏரிக்கரை மீதாக, 1 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைந்துள்ளது.
பல்வேறு வளைவுகளுடன் இருந்த குறிப்பிட்ட சாலை பகுதியில் விபத்துகள் நடந்து வந்தன. கடந்த 2010ல், ஆந்திர மாநிலத்தில் இருந்து, இந்த வழியாக திருமண வீட்டார் வந்த லாரி ஒன்று ஏரியில் பாய்ந்தது.
இதில், பலர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து, இந்த ஏரியின் வளைவு பகுதிகளை நேர் செய்யும் பணியை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது.
தற்போது ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில், தார் சாலையை ஒட்டிய பள்ளத்தை சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலையை ஒட்டி இருந்த புதர், இயந்திரம் வாயிலாக சமன் செய்யப்பட்டு, மண் கொண்டும் பணி நேற்று துவங்கியது. இதனால், சாலையின் அகலம் மேலும் அதிகரிக்கும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
