ADDED : மார் 22, 2026 05:06 AM

அ நிறம் | அளவு
திருத்தணி: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திரளான இஸ்லாமியர்கள் குழந்தைகளுடன் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நேற்று காலை, அங்குள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
அதேபோல், மக்கா பள்ளி வாசல், ம.பொ.சி.சாலையில் உள்ள ஜூம்மா மசூதி, திருத்தணி இஸ்லாம் நகர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவள்ளூரில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
