ADDED : ஏப் 23, 2026 06:43 AM

அ நிறம் | அளவு
செவிலிமேடு: சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. சித்திரை மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
