/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி ராமாபுரம் விளையாட்டு மைதானம்
/
பராமரிப்பின்றி ராமாபுரம் விளையாட்டு மைதானம்
ADDED : டிச 22, 2024 01:00 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்டது ராமாபுரம் ஊராட்சி. இங்கு இ- - சேவை மையம் எதிரே விளையாட்டு உபகரணங்களுடன்கூடிய விளையாட்டு மைதானம், 2013- - 14ம் ஆண்டு ஒன்றிய நிதி வாயிலாக அமைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் -- சிறுமியர் மற்றும் இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓராண்டாக இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாத நிலையில் தற்போது துருப்பிடித்தும் மைதானத்தில் செடிகள் முளைத்து உள்ளன.
இதனால், சிறுவர் -- சிறுமியர் விளையாட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் சிறுவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது.
எனவே, விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.