ADDED : ஜூன் 25, 2026 02:28 AM
திருத்தணி: ஆறு மாதங்களுக்கு பின், புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
திருத்தணி தாலுகாவில், மொத்தம் 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், புதிய ரேஷன் கார்டு வழங்கக்கோரி, கடந்தாண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் வரை, 1,300க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்ட காரணத்தால், புது ரேஷன் கார்டுகள் வழங்கு வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், புதிய அரசு அமைந்துள்ளதால், வட்ட வழங்கல் அலுவலர் விஜயா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த பயனாளிகளின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி, தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்தனர்.
இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு பின், கடந்த ஒரு வாரமாக, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நடந்J வருகிறது.
இது குறித்து, வட்ட வழங்கல் அலுவலர் விஜயா கூறுகையில், ''விண்ணப்பித்ததில், 700க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பயனாளிகளின் மொபைல் போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி, ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.
