/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாயமான சிறுவன் சடலமாக குட்டையில் மீட்பு
/
மாயமான சிறுவன் சடலமாக குட்டையில் மீட்பு
ADDED : பிப் 11, 2025 12:13 AM

சோழவரம்,
சோழவரம் அடுத்த, சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் லோகேஷ்குமார், 8. பம்மதுகுளம் அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 9ம்தேதி மாலை, விளையாட சென்ற சிறுவன் லோகேஷ்குமார், நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று, சிவந்தி ஆதித்தன் நகரில் உள்ள, தனியார் அரிசி ஆலையின் கழிவுநீர் குட்டையில் லோகேஷ்குமார் இறந்த நிலையில் கிடந்தார். காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சிறுவனின் இறப்பு குறித்து சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை எனக்கூறி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

