/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.70 லட்சம் அரசு நிலம் திருப்பாச்சூரில் மீட்பு
/
ரூ.70 லட்சம் அரசு நிலம் திருப்பாச்சூரில் மீட்பு
ADDED : ஜன 30, 2024 12:53 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் புல எண்: 222/1 கிராம நத்தம் வகைப்பாடு கொண்ட நிலத்தில் 32 சென்ட் பகுதியை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ரவி என்பவர் வீடு கட்டியுள்ளார்.
இதுகுறித்து பகுதிவாசிகள் கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமாருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து துணை தாசில்தார் ஆதிலட்சுமி, ஆர்.ஐ., இளமதி, வி.ஏ.ஓ., லோகநாதன் மற்றும் வருவாய் துறையினர் கடந்த 27ம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.
அப்போது ரவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வருவாய்த்துறையினரிடம், அவர்கள் வீட்டில் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டுமென கூறி இரண்டு நாள் அவகாசம் கேட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு வந்து, ஆக்கிரமிப்பில் இருந்த 32 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.
இதன் மதிப்பு, 70 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் தாலுகா போலீசார் செய்திருந்தனர்.